முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், 12 வயது சிறுமிக்கு சிறப்பு அறுவை சிகிச்சை : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், 12 வயது சிறுமிக்கு சிறப்பு அறுவை சிகிச்சை : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி

ஞாயிறு, மார்ச் 06,2016,

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், 12 வயது சிறுமிக்கு சிறப்பு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான அறுவைசிகிச்சையை, செலவு ஏதுமின்றி மேற்கொள்ள உத்தரவிட்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, சிறுமியின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

நாகை மாவட்டம் ஆதரையூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அன்பழகன் என்பவரின் 12 வயது மகள் இளையராணிக்கு, பிறவியில் இருந்தே இருதய குறைபாடு இருந்து வந்தது. இதனால் சுவாசப் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு கோளாறுகளால் அவதிப்பட்ட வந்த சிறுமிக்கு சிகிச்சை மேற்கொள்ள, அவரது பெற்றோர், மருத்துவமனையை அணுகினர். அப்போது, சிறுமிக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதற்கு லட்சக்கணக்கில் ரூபாய் செலவழிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். அதை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோரிடம், முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டம் குறித்து தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, அந்த திட்டத்தின் கீழ் சிகிச்சைப் பெறுவதற்காக தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமி இளையராணி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமியின் மார்பில்சிறு துவாரத்தை ஏற்படுத்தி நுண்துளை இருதய அறுவை சிகிச்சை எனும் நவீன முறையை பயன்படுத்தி அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.

3 லட்சம் ரூபாய் செலவிலான மருத்துவ அறுவை சிகிச்சையை, செலவு ஏதுமின்றி மேற்கொள்ள உதவிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, சிறுமியின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.