முதலமைச்சருக்கு செயற்கை சுவாசம்,பிசியோதெரப்பி தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது ; அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை

முதலமைச்சருக்கு செயற்கை சுவாசம்,பிசியோதெரப்பி தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது ; அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை

செவ்வாய்,அக்டோபர் 11,2016,

முதலமைச்சருக்கு செயற்கை சுவாசம், பிசியோதெரப்பி தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 22ம் தேதி முதல், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், சென்னை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் ஜெயலலிதா சிறப்பு மருத்துவர்கள் கொண்ட குழுவால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. முதலமைச்சருக்கு செயற்கை சுவாச உதவி, ஆன்டிபயோடிக்ஸ், ஊட்டச்சத்து, பிசியோதெரபி சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த இரத்தநாள சிகிச்சை நிபுணர் ஜி.கினானி அக்டோபர் 9 மற்றும் 10ம் தேதிகளில் அப்பல்லோவுக்கு மீண்டும் தந்து, முதலமைச்சரின் உடல்நிலையை பரிசோதித்தாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைகள் தொடரும் எனவும், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.