முதலமைச்சர் உத்தரவின்பேரில்,வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் நிவாரண நடவடிக்கைகள் தீவிரம் : வீடு வீடாகச் சென்று, வெள்ள நிவாரண கணக்கெடுக்கும் பணிகள் மும்முரம்

முதலமைச்சர்  உத்தரவின்பேரில்,வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் நிவாரண நடவடிக்கைகள் தீவிரம் : வீடு வீடாகச் சென்று, வெள்ள நிவாரண கணக்கெடுக்கும் பணிகள் மும்முரம்

செவ்வாய், டிசம்பர் 15,2015,

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில், முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், வீடு வீடாகச் சென்று வெள்ள நிவாரண கணக்கெடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விரைந்து நடவடிக்கை மேற்கொண்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பெய்த கனமழை மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், சென்னை உட்பட வட கடலோர மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட போர்க்கால நடவடிக்கைகளின் பயனாக, இந்த மாவட்டங்களில் இயல்புநிலை திரும்பியுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வீடுகளை இழந்த குடும்பத்தினருக்கு 10 ஆயிரம் ரூபாயும், பாதிக்கப்பட்ட இதர குடும்பத்தினருக்கு 5 ஆயிரம் ரூபாயும் நிவாரண நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்துள்ளார். முதலமைச்சர் உத்தரவின்பேரில் வெள்ள நிவாரணம் குறித்த கணக்கெடுக்கும் பணிகள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும், பாதிப்புக்குள்ளான மாவட்டங்களிலும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வெளிமாவட்டங்களிலிருந்து சென்னை வந்துள்ள ஊழியர்கள், நிவாரண கணக்கெடுப்பு பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். திருவல்லிக்கேணி நடுவாங்குப்பம் பகுதியில் வெள்ள நிவாரணப் பணிகள் இன்று நடைபெற்றன. ஊழியர்கள், வீடு வீடாகச் சென்று வெள்ள பாதிப்புகள் மற்றும் சேதங்கள் குறித்தும் கேட்டறிந்தனர். வெள்ள பாதிப்பிலிருந்து உணவு, உடை உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கியதுடன், வெள்ள நிவாரண கணக்கெடுப்பையும் உடனடியாக தொடங்கி சிறப்பாக மேற்கொண்டுள்ள முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்கள் நெஞ்சம் நெகிழ நன்றி தெரிவித்தனர்.