முதலமைச்சர் உத்தரவுப்படி,கும்பகோணத்தில் உள்ள 5 வடிநீர் வாய்கால்கள் தூர் வாரப்பட்டு வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

முதலமைச்சர் உத்தரவுப்படி,கும்பகோணத்தில் உள்ள 5 வடிநீர் வாய்கால்கள் தூர் வாரப்பட்டு வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி

வியாழக்கிழமை, டிசம்பர் 24,

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள 5 வடிநீர் வாய்கால்கள் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் தூர் வாரப்பட்டு வருவது, அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நீர்நிலைகளை பாதுகாக்க அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கும்பகோணம் நகர மக்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.

கும்பகோணம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகள் வழியாக செல்லும் உள்ளூர் வாய்க்கால், பெரும்பாண்டி வாய்க்கால், பழவாத்தான் கட்டளை வாய்க்கால், ஓலைப்பட்டின வாய்க்கால் மற்றும் மோரி வாய்க்கால் ஆகிய ஐந்து நீர்நிலைகளிலும் தூர் வாரி சீரமைக்க ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் நிதியை முதலமைச்சர் ஜெயலலிதா அண்மையில் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து ஐந்து வாய்க்கால்களிலும் தூர் வாரும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒரே நேரத்தில் 5 வாய்க்கால்களையும் தூர் வாரி, நீர்நிலைகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கும்பகோணம் நகர பகுதி மக்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.