முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் நன்றி

முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள்  நன்றி

செவ்வாய்க்கிழமை, ஜனவரி 31, 2017,

சென்னை ; முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை இன்று, அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் சந்தித்து, தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்தமைக்காக நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

தலைமைச் செயலகத்தில் இன்று,முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வத்தை, அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர்கள் திரு. கே. பாலகிருஷ்ணன், திரு. எஸ். குணசேகரன், பொதுச் செயலாளர்கள் திரு. பெ. சண்முகம், திரு. வே. துரைமாணிக்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் திரு. எஸ். திருநாவுக்கரசு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. மாசிலாமணி, தஞ்சை மாவட்டச் செயலாளர் திரு. சாமி. நடராஜன், ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகி திரு. விஸ்வநாதன், அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் திரு. பி.கே. தெய்வசிகாமணி, திரு. மு. சேரன், தென்னிந்திய கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு. கே.வி. ராஜ்குமார், பொதுச் செயலாளர் திரு. எஸ். வெங்கடேசன் ஆகியோர் சந்தித்து, தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவித்தமைக்காக தங்களது நன்றியினை தெரிவித்துக்கொண்டனர். பின்னர், விவசாயிகளின் பிரச்னை தொடர்பான கோரிக்கை மனுவினை, முதலமைச்சரிடம் அவர்கள் வழங்கினர்.