முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாடுவது குறித்து, பல்வேறு மாவட்டங்களில் அ.இ.அ.தி.மு.க. சார்பில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாடுவது குறித்து, பல்வேறு மாவட்டங்களில் அ.இ.அ.தி.மு.க. சார்பில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாடுவது குறித்து, பல்வேறு மாவட்டங்களில் அ.இ.அ.தி.மு.க. சார்பில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன. இதில் ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், சிறப்பு வழிபாடு நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து முடிவு செய்வதற்காக நாகை மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், அமைச்சர் திரு.கே.ஏ.ஜெயபால் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கழக நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் முதலமைச்சரின் 68-வது பிறந்தநாளை முதியவர்களுக்கு வேட்டி-சேலை வழங்கியும், மாணவ-மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கியும் கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள், ரத்த தான முகாம்கள், மும்மத பிரார்த்தனை கூட்டங்கள், போன்றவற்றை சிறப்பாக நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.எஸ்.பவுன்ராஜ், திருமதி.ம.சக்தி, என்.வி.காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதேபோன்று, ஈரோடு புறநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், முதலமைச்சரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் திரு.தோப்பு என்.டி.வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

மேலும் கெய்ல் நிறுவனம் எரிவாயு குழாய்களைக் கொண்டு செல்ல அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தும், வெள்ள நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைவாக மேற்கொண்டதற்காக முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி.சத்தியபாமா, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.செங்கோட்டையன், திரு.பி.ஜி.நாராயணன், எஸ்.எஸ்.ரமணிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

முதலமைச்சரின் 68-வது பிறந்தநாளையொட்டி, திருவாரூர் மாவட்டம் அ.இ.அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ஏழை-எளிய பிரிவுகளைச் சேர்ந்த 104 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது. அமைச்சர் திரு.ஆர்.காமராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஏழை-எளிய மக்களுக்கு வேட்டி, சேலை, தையல் இயந்திரம், 3 சக்கர வாகனம் வழங்குதல், வரும் 24-ம் தேதி முதலமைச்சர் பிறந்தநாள் அன்று ஆலயங்களில் யாகம், சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அன்னதானம் வழங்குவது என்றும், கிறிஸ்தவ தேவாலயங்கள், மசூதிகள் ஆகியவற்றில் சிறப்பு பிரார்த்தனைகள் மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சரின் 68-வது பிறந்தநாளை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து முடிவு செய்யப்பட்டது. மேலும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் கழக நிர்வாகிகள் அயராது உழைத்து, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவிக்கும் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கழக நிர்வாகிகள், எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.