முதலமைச்சர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட “சூரிய சக்தி மோட்டார் திட்டத்தினால்” உற்பத்தி செலவு குறைந்து அதிக லாபம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

முதலமைச்சர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட “சூரிய சக்தி மோட்டார் திட்டத்தினால்” உற்பத்தி செலவு குறைந்து அதிக லாபம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

புதன்கிழமை, டிசம்பர் 16, 2015,

முதலமைச்சர்  ஜெயலலிதா ஆணைக்கிணங்க, விவசாயிகளுக்கு சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் வழங்கப்பட்டுள்ளதால், உற்பத்தி செலவு குறைந்து, விவசாயிகள் அதிக லாபம் அடைந்து வருகின்றனர்.

விவசாயத்தில் நீர்ப்பாசன தேவையைப் பூர்த்தி செய்யவும், மரபுசாரா எரிசக்தியைப் பயன்படுத்தவும், இயற்கையாகக் கிடைக்கும் சூரிய சக்தியின் மூலம், நீர்ப்பாசனத்தை மேற்கொள்ள, ‘சூரிய சக்தி மோட்டார் திட்டத்தை’ முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கெனவே அறிவித்தார். இத்திட்டத்திற்கு, தமிழக அரசு 50 சதவீதம் மானியமும், மத்திய அரசு 30 சதவீத மானியமும் வழங்குகின்றன. மீதம் 20 சதவீத தொகையை மட்டும் விவசாயிகள் செலுத்தி, தங்கள் நிலத்தில் சூரிய சக்தி மோட்டார் பம்புகள் அமைத்துக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இயற்கை எரிசக்தியை பயன்படுத்துவோருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா அனைத்து உதவிகளையும் வழங்குவதால், விவசாயிகள் தங்கள் நிலங்களில் சூரிய சக்தி மோட்டார் அமைக்க மிகவும் ஆர்வம் காட்டுகின்றனர். திருச்சி மாவட்டத்தில் 66 இடங்களில் சூரிய சக்தி மோட்டார்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 40 இடங்களில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்சார செலவு இல்லாமல், விவசாயிகள் பெரிதும் பயனடைந்து வருகின்றனர். இதற்காக, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.