முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைத் திட்டங்களால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் 25 ஆயிரம் பேர் கழகத்தில் ஒரே நேரத்தில் இணைந்தனர்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைத் திட்டங்களால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் 25 ஆயிரம் பேர் கழகத்தில் ஒரே நேரத்தில் இணைந்தனர்

திங்கள் , ஜனவரி 11,2016,

மதுரையில் நடைபெற்ற பிரம்மாண்டமான அ.இ.அ.தி.மு.க உறுப்பினர் சேர்க்கை முகாமில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களும், இளம்பெண்களும் தங்களை கழக உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர். மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், ஏழை-எளியோர் என அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கும் சக்தியாக முதலமைச்சர் ஜெயலலிதா விளங்கி வருவதால் இளைஞர்கள், தாங்களாகவே முன்வந்து அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர். மதுரையில் நடைபெற்ற இந்த முகாமில் அ.இ.அ.தி.மு.க.வின் கொள்கை மற்றும் கோட்பாடுகள் குறித்து அமைச்சர்கள் திரு.ஓ.பன்னீர்செல்வம், திரு.நத்தம் ஆர்.விஸ்வநாதன், திரு.செல்லூர் கே.ராஜூ ஆகியோர் எடுத்துரைத்தனர்.