முதலமைச்சர் ஜெயலலிதாவின் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் முன்னோடித் திட்டம் 100 சதவீத இலக்கை அடைந்து சாதனை!

முதலமைச்சர் ஜெயலலிதாவின் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் முன்னோடித் திட்டம் 100 சதவீத இலக்கை அடைந்து சாதனை!

வியாழக்கிழமை, பிப்ரவரி 04, 2016,

இந்தியாவிலேயே முதன்முறையாக, முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்த, முன்னோடித் திட்டங்களில் ஒன்றான, மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டம், நூறு சதவீத இலக்கினை அடைந்து நிறைவு பெற்று சாதனை படைக்கப்பட்டுள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா, நாட்டிலேயே முதல்முறையாக மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் முன்னோடித் திட்டத்தை கடந்த 2011-ம் ஆண்டு தொடங்கி வைத்தார். இந்தியா மட்டுமல்லாமல், உலக அளவிலும் கல்வித்துறையினர் மட்டுமல்லாமல் பல்வேறு துறையினராலும் மிகப்பெரிய பாராட்டுதல் பெற்ற இத்திட்டத்தின் செயல்பாடு குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

21-ம் நூற்றாண்டின் வளர்ச்சி இலக்கிற்கு இயைந்தவாறு, மாணவர்களின் திறனை மேம்படுத்த வேண்டுமென்ற நோக்கில், முதலமைச்சர் ஜெயலலிதா, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் ஆகியவற்றில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு, விலையில்லா மடிக்கணினிகள் வழங்க உத்தரவிட்டதோடு, கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 15-ம் தேதி, பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாவின்போது, திருவள்ளூர் மாவட்டம், காக்களூரில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார்.

முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, 2011-ம் ஆண்டு முதல், இத்திட்டத்திற்காக 6 ஆயிரத்து 456 புள்ளி நான்கு நான்கு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 31 லட்சத்து 76 ஆயிரத்து 18 மடிக்கணினிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு, நூறு சதவீத இலக்கினை அடைந்து, இத்திட்டம் நிறைவு பெற்றுள்ளது என, சென்னையில் நேற்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் திரு. K.T. ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.