முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகத்தான திட்டங்களால் அனைத்து துறைகளிலும் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது : இந்திய – அமெரிக்க அசோசியேஷன் பாராட்டு

முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகத்தான திட்டங்களால் அனைத்து துறைகளிலும் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது : இந்திய – அமெரிக்க அசோசியேஷன் பாராட்டு

செவ்வாய், டிசம்பர் 01,2015,

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மகத்தான திட்டங்களால் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம் உட்பட அனைத்து துறைகளிலும் தமிழ்நாடு, இந்தியாவிலேலேயே முன்னணி மாநிலமாக தலைசிறந்து விளங்குவதாக, இந்திய – அமெரிக்க அசோசியேஷன் சார்பில் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற விவாத நிகழ்ச்சியின்போது பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்திய – அமெரிக்க அசோசியேஷன் சார்பில், Elihu Yale International collegiate debate – எனப்படும் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்கும் விவாத நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 15 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா, தமிழ்நாட்டில் அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றங்களுக்காக பல்வேறு சிறப்பான திட்டங்களைத் தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருவதால், தமிழகம் ஏற்றத்தாழ்வற்ற மாநிலமாக திகழ்ந்து முன்னேற்றப் பாதையில் வேகமாக செல்வதாக இந்நிகழ்ச்சியின்போது பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கல்வித்துறையில், மாணவ-மாணவிகளின் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்காக விலையில்லா மடிக்கணினி வழங்குதல் மற்றும் தொழில் முனைவோருக்காக அரசு அளித்துவரும் அனைத்து உதவிகள் குறித்தும் இந்நிகழ்ச்சியில் பெருமிதத்துடன் எடுத்துரைக்கப்பட்டன. கிராமப்புற அளவிலும் கணினி தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு, இந்தியாவிலேயே Super Power மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாகவும் இந்த விவாத நிகழ்ச்சியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.