முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளையொட்டி, சென்னை வடபழனியில் மாபெரும் மருத்துவ முகாம் :உயர்தர சிகிச்சை கிடைத்ததற்காக முதலமைச்சருக்கு பொதுமக்கள் நன்றி!

முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளையொட்டி, சென்னை வடபழனியில் மாபெரும் மருத்துவ முகாம் :உயர்தர சிகிச்சை கிடைத்ததற்காக முதலமைச்சருக்கு பொதுமக்கள் நன்றி!

ஞாயிறு, பெப்ரவரி 07,2016,

முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளையொட்டி, சென்னை வடபழனியில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு, மருந்து பரிசோதனைகள் பெற்றனர்.

முதலமைச்சர்  ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளை முன்னிட்டு, தென்சென்னை வடக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், வடபழனியில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. அமைச்சர் திருமதி. பா.வளர்மதி, டாக்டர் ஜெ ஜெயவர்தன் எம்.பி., உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்த முகாமில், மகப்பேறு, குழந்தைகள், இதயம், எலும்பு, சிறுநீரகம், காது, மூக்கு, தொண்டை, கண், தோல் பிரிவு சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு தேவையான சிகிச்சை அளித்தனர். இந்த முகாமில், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு, உயர் மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதனைகளை பெற்றுக்கொண்டனர். மருத்துவ முகாம் மூலம் உயர்தர சிகிச்சை கிடைத்ததற்காக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.