முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை ஆரம்ப சுகாதார நிலையங்களில் தாய்சேய் நல சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடக்கம்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை ஆரம்ப சுகாதார நிலையங்களில் தாய்சேய் நல சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடக்கம்

செவ்வாய், பெப்ரவரி 09,2016,

முதலமைச்சர்  ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளை முன்னிட்டு, மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 13 ஆரம்ப சுகாதார நிலையங்களில் தாய்சேய் நல சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன.

முதலமைச்சர்  ஜெ ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில், பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மதுரையில் மாநகராட்சிக்கு உட்பட்ட 13 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தாய்சேய் நல சிறப்பு மருத்துவ முகாம்கள் இன்று தொடங்கி வைக்கப்பட்டன. முனிச்சாலை பகுதியில் அமைந்துள்ள சுகாதார நிலையத்தில், மேயர் திரு. ராஜன்செல்லப்பா முகாமைத் தொடங்கி வைத்தார். கர்ப்பிணிப் பெண்களுக்கு மகப்பேறு நிதியுதவி, அம்மா குழந்தைகள் நலப் பெட்டகம் ஆகியவற்யையும் வழங்கினார். மேலும் இந்த முகாமில் பங்கேற்ற கர்ப்பிணிப் பெண்களுக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கும் பரிசோதனைகள் செய்யப்பட்டு மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டன.