முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் ஏழை-எளியோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் ஏழை-எளியோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்

புதன்கிழமை, பிப்ரவரி 10, 2016,

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் தமிழகத்தின் பல்வேறு திருக்கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தியதுடன், ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கினர்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை வடபழனி முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் திரு. S.P.வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் ஒன்றிய நகர கழகம் சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து முடிவுசெய்யப்பட்டது.

முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு, திருவொற்றியூர் சின்னமேட்டு குப்பம் பகுதியில் உள்ள ஆயிரத்து 368 பயனாளிகளுக்கு போர்வைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கழக செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் சின்னகேக்காடு, அம்பத்தூர் மாதவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சரின் சாதனைகள், நலத்திட்ட உதவிகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68வது பிறந்த நாளை முன்னிட்டு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டன.

காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டக்கழகம் சார்பில் அருள்மிகு குமரகோட்ட சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பல்லாண்டு காலம் வாழ வேண்டியும், தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சராக அரியணை ஏற வேண்டியும் வெள்ளித்தேர் இழுத்து வழிபாடு நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68வது பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியக்கழகம் சார்பில் சோமங்கலத்தில் சாதனை விளக்கப் பொதுகூட்டம் நடைபெற்றது. இதில் நடிகர் ராமராஜன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் மத்திய மாவட்ட கழகம் சார்பில் திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி திருக்கோவிலில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்கத்தேர் இழுத்தும் வழிபாடு நடத்தினர். பின்னர் பக்தர்களுக்கு நலத்திட்ட உதவிகளும், அன்னதானமும் வழங்கப்பட்டன.