முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி,அ.தி.மு.க. தொண்டர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கியும், மருத்துவ முகாம்கள் நடத்தியும் கொண்டாட்டம்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி,அ.தி.மு.க. தொண்டர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கியும், மருத்துவ முகாம்கள் நடத்தியும் கொண்டாட்டம்

புதன், பெப்ரவரி 10,2016,

முதலமைச்சர்  ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளையொட்டி, தமிழகம் முழுவதும் தொண்டர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கியும், மருத்துவ முகாம்கள் நடத்தியும் மிகச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

முதலமைச்சர்  ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளையொட்டி, சென்னை ஆயிரம் விளக்கு 113-வது வார்டு பகுதியில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழை எளிய பெண்களுக்கு அமைச்சர் திருமதி. பா. வளர்மதி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் நல்ல தண்ணீ்ர் ஓடைக்குப்பம் பகுதியில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று பயன்பெற்றனர்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திருவொற்றியூர் சின்ன மேட்டுக்குப்பம் பகுதியில், முதலமைச்சரின் பிறந்தநாளையொட்டி, ஆயிரத்து 368 பேருக்கு, போர்வைகள் வழங்கப்பட்டன.

காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியக் கழகம் சார்பில், சோமங்கலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், கழக நிர்வாகிகள் பங்கேற்றனர். ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதேபோல், குமரக்கோட்டம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், தங்கத்தேர் இழுத்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது. நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் மத்திய மாவட்டக் கழகம் சார்பில், முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, அருள்மிகு கந்தசாமி திருக்கோயிலில், முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொண்டர்கள் தங்கத் தேர் இழுத்து பிரார்த்தனையில் ஈடுபட்டதோடு, நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

பெரம்பலூர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில், தண்ணீர் பந்தல் கிராமத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.

முதலமைச்சர்  ஜெயலலிதாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து, நாகை மாவட்டம் வேதாரண்யத்தில், கழக நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏழை எளியோருக்கு நலத்திட்டங்கள் வழங்கவும், கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி அன்னதானம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.