முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடியில் தாய்-சேய் நல சிறப்பு மருத்துவ முகாம் : பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்பு

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடியில் தாய்-சேய் நல சிறப்பு மருத்துவ முகாம் : பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்பு

வியாழன் , பெப்ரவரி 11,2016,

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடியில் தாய்-சேய் நல சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சி பொது சுகாதாரத்துறை சார்பில், தாய்-சேய் நல சிறப்பு மருத்துவ முகாம், எஸ்.எஸ்.பிள்ளை தெருவில் உள்ள பள்ளியில் நடைபெற்றது. பெண்களுக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, ஈ.சி.ஜி. போன்ற பரிசோதனைகள் நடத்தப்பட்டன. கர்ப்பிணிப் பெண்களுக்கு சிறப்பு பரிசோதனைகளும், மருந்து, மாத்திரைகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.மேயர் அந்தோணி கிரேசி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.