முதலமைச்சர் ஜெயலலிதாவின் கல்வி, கலை, அரசியல், சாதனைகளை எடுத்துரைக்கும் “நமது அம்மா” புத்தகம் மதுரையில் வெளியிடப்பட்டது

முதலமைச்சர் ஜெயலலிதாவின் கல்வி, கலை, அரசியல், சாதனைகளை எடுத்துரைக்கும் “நமது அம்மா” புத்தகம் மதுரையில் வெளியிடப்பட்டது

திங்கள் , பெப்ரவரி 15,2016,

முதலமைச்சர் ஜெயலலிதாவின் கல்வி, கலை, அரசியல், சாதனைகளை எடுத்துரைக்கும் “நமது அம்மா”- தகவல் களஞ்சியம் என்னும் தலைப்பிலான புத்தகம் மதுரையில் வெளியிடப்பட்டது.

மதுரை புறநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், திருப்பரங்குன்றம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் வாழ்க்கையில் கல்வி, கலை, அரசியல், சாதனை, தியாகம், பொதுவாழ்க்கை, துணிச்சல் போன்றவற்றை எடுத்துரைக்கும் வினாவிடை தொகுப்பாக பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் நமது அம்மா – என்னும் தகவல் களஞ்சியப் புத்தகம் வெளியிடப்பட்டது. இதனை கழக புறநகர் மாவட்ட செயலாளர் மேயர் திரு. ராஜன் செல்லப்பா வெளியிட்டார். இந்த புத்தக வெளியிட்டு விழாவில், தி.மு.க.வின் ஊழல் மற்றும் கபட நாடகங்களை கவிதை நடையில் எடுத்துரைத்து பேசியது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஜெயலலிதாவின், வாழ்க்கை குறித்த அரிய புகைப்படங்கள் மற்றும் முதலமைச்சரால் நிறைவேற்றப்பட்ட சிறப்புத்திட்டங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.