முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகளை மக்களிடையே பிரச்சாரம் செய்ய தமிழகம் முழுவதும் எழுச்சிப் பயணம்:அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் பங்கேற்பு!

முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகளை மக்களிடையே பிரச்சாரம் செய்ய தமிழகம் முழுவதும் எழுச்சிப் பயணம்:அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் பங்கேற்பு!

செவ்வாய்கிழமை, பிப்ரவரி 16, 2016,

முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. அரசு நிறைவேற்றியுள்ள மகத்தான மக்கள் நலத்திட்டங்களையும், முதலமைச்சரின் சட்டப்பேரவை உரைகளையும், அனைத்துப் பகுதிகளிலும் மக்களிடையே எடுத்துச்செல்லும் வகையில், கழக மகளிர் அணி சார்பில் எழுச்சிப் பிரச்சாரப் பயணம்  நடைபெற்று வருகிறது. அமைச்சர்கள், கழக நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றுள்ளனர்.

முதலமைச்சர்  ஜெயலலிதா, தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து கடந்த மாதம் உரையாற்றினார். முதலமைச்சர் ஆற்றிய உரையில், கழக அரசின் மக்கள் நலத்திட்டங்கள், நிறைவேற்றியுள்ள சாதனைகள் உள்ளிட்டவை விரிவாக இடம்பெற்றிருந்தது. முதலமைச்சர்  ஜெயலலிதாவின் இந்த எழுச்சி உரையில் இடம்பெற்றுள்ள அம்சங்களை தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கொண்டு சேர்க்கும் வகையில், கழக மகளிர் அணி சார்பில் இன்று எழுச்சிப் பிரச்சாரப் பயணம் நடைபெற்று வருகிறது.

தென்சென்னை தெற்கு மாவட்டக் கழக மகளிர் அணி சார்பில் அண்ணாநகரில் நடைபெற்ற எழுச்சிப் பிரச்சாரப் பேரணியை கழக பொருளாளரும், அமைச்சருமான திரு. ஓ. பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கழக மகளிர் அணிச் செயலாளரும், அமைச்சருமான திருமதி. எஸ். கோகுல இந்திரா, சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பெருந்திரளான மகளிர் அணியினர் கலந்து கொண்டு, புல்லா அவென்யூ, பூந்தமல்லி நெடுஞ்சாலை, திருவீதியம்மன் சாலை உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களை சந்தித்து, கழக அரசின் சாதனைகள் அடங்கிய பிரசுரங்களை வழங்கினர்.

தென்சென்னை தெற்கு மாவட்டக் கழக மகளிர் அணி சார்பில், சைதாப்பேட்டையில் நடைபெற்ற எழுச்சிப் பேரணியில் கழக அமைப்புச் செயலாளரும், மாநில மகளிர் ஆணையத் தலைவருமான திருமதி. விசாலாட்சி நெடுஞ்செழியன், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கழக மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்று, வீதி வீதியாகச் சென்று முதலமைச்சரின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர்.

வடசென்னை தெற்கு மாவட்டக் கழக மகளிர் அணி சார்பில், சூளை பகுதியில் நடைபெற்ற எழுச்சிப் பேரணியில், கழக அமைப்புச் செயலாளர் திரு. பண்ருட்டி ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஏராளமான மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசின் சாதனைகளை விளக்கும் பிரசுரங்களை வழங்கினர்.

வடசென்னை வடக்கு மாவட்ட மகளிரணி சார்பில், ஆர்.கே. நகர் தொகுதியில் நடைபெற்ற எழுச்சிப் பிரச்சார பயணத்தில், அமைச்சர் திருமதி. பா. வளர்மதி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மகளிரணி நிர்வாகிகள் உள்பட திரளானோர் கலந்துகொண்டனர். இப்பயணத்தில் பங்கேற்ற மகளிரணியினர், கழக கொடி ஏந்தி சென்று, முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொலைநோக்கு திட்டங்களையும், சாதனைகளையும் விளக்கும் கையேடுகளை பொதுமக்களிடம் வழங்கினர்.

சிவகங்கை மாவட்டக் கழக மகளிர் அணி சார்பில், சிவன்கோயில் அருகே தொடங்கிய எழுச்சிப் பிரச்சாரப் பேரணியை, அமைச்சர் திரு.ஆர்.பி.உதயகுமார் தொடங்கிவைத்தார். நாடாளுமன்ற உறுப்பினர் திரு.பி.ஆர்.செந்தில்நாதன், கழக மகளிர் அணி நிர்வாகிகள் உட்பட, ஏராளமானோர் பேரணியில் பங்கேற்று முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சாதனைகள் அடங்கிய பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர்.

ஈரோடு புறநகர் மாவட்ட மகளிர் அணி சார்பில், சத்தியமங்கலத்தில் எழுச்சிப் பேரணியை அமைச்சர் திரு.தோப்பு N.D.வெங்கடாசலம் தொடங்கிவைத்தார். புறநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் திருமதி.வி.சத்தியபாமா எம்.பி. தலைமையில், கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர், 3 கிலோமீட்டர் தூரம் பேரணியாகச் சென்று, கழக அரசின் சாதனைகளையும், முதலமைச்சரின் சட்டப்பேரவை உரைகளின் கையேடுகளையும் பொதுமக்களிடம் வழங்கினர்.

பெரம்பலூர் மாவட்ட கழக மகளிரணி சார்பில், புதிய பேருந்து நிலையம் எம்.ஜி.ஆர். சிலை அருகிலிருந்து புறப்பட்ட எழுச்சிப் பயணத்தில், அமைச்சர் திரு.T.P. பூனாட்சி, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

திருச்சி புறநகர் மாவட்ட கழக மகளிரணி சார்பில், சமயபுரத்தில் தொடங்கிய எழுச்சி பிரச்சார பயணத்தை கழக பாசறை செயலாளர் திரு. ப. குமார் எம்.பி., தொடங்கி வைத்தார். மகளிரணியைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தப் பயணத்தில் பங்கேற்றனர்.

மதுரை மாநகர் மற்றும் மதுரை புறநகர் மாவட்ட மகளிரணி சார்பில் எழுச்சி பிரச்சார பயணம் நடைபெற்றது. இதில், அமைச்சர் திரு. செல்லூர் கே. ராஜு, டெல்லி சிறப்பு பிரதிநிதி திரு.S.T.K. ஜக்கையன், மேயர் திரு. ராஜன்செல்லப்பா, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

காஞ்சிபுரம் மத்திய மாவட்ட கழக மகளிரணி சார்பில், மதுராந்தகத்தில் எழுச்சிப் பிரச்சார பயணத்தை கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் திரு. அஸ்பயர் கே சுவாமிநாதன் தொடங்கிவைத்தார். கழக அரசின் சாதனைகள் அடங்கிய பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட கழக மகளிரணி சார்பில், பொன்னேரியில் நடைபெற்ற எழுச்சிப் பிரச்சாரப் பயணத்தில் திரு. எஸ். அப்துல்ரஹீம், கழக நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பெருமளவில் கலந்துகொண்டனர்.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக மகளிரணி சார்பில், தண்டரையில் நடைபெற்ற எழுச்சிப் பிரச்சாரப் பயணத்தில், கழக அவைத் தலைவர் திரு. இ. மதுசூதனன், மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரளாகக் கலந்துகொண்டனர். கழக அரசின் சாதனைகளை விளக்கும் கையேடுகளை வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் வழங்கினர்.

நாகை மாவட்ட கழக மகளிரணி சார்பில், மயிலாடுதுறையில் நடைபெற்ற எழுச்சி பிரச்சார பயணத்தை அமைச்சர் திரு. கே.ஏ. ஜெயபால் தொடங்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணியின்போது, கழக அரசின் சாதனைகளை விளக்கும் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

ஈரோடு மாநகர் மாவட்டம் மகளிரணி சார்பில் நடைபெற்ற, எழுச்சிப் பிரச்சாரப் பயணத்தை அண்ணா தொழிற்சங்கப் பேரவை மாநிலச் செயலாளர் திரு. சின்னசாமி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். வ.உ.சி. மைதானத்திலிருந்து புறப்பட்ட இந்தப் பிரச்சாரப் பயணத்தில் பங்கேற்றவர்கள், கழக அரசின் சாதனைகளை விளக்கும் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.

தூத்துக்குடி ராஜாஜி பூங்கா அருகே, மாவட்ட மகளிர் அணி சார்பில் நடைபெற்ற எழுச்சிப் பேரணியில், அமைச்சர் திரு.எஸ்.பி.சண்முகநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஜெயசிங் தியாகராஜ நட்டர்ஜி, மேயர் திருமதி. அந்தோணி கிரேஸி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.