முதலமைச்சர் ஜெயலலிதாவின் தீவிர நடவடிக்கையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியுள்ளது:விவசாயிகள் முதலமைச்சர்க்கு பாராட்டும் நன்றியும், தெரிவிப்பு

முதலமைச்சர் ஜெயலலிதாவின் தீவிர நடவடிக்கையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியுள்ளது:விவசாயிகள் முதலமைச்சர்க்கு பாராட்டும் நன்றியும், தெரிவிப்பு

செவ்வாய், டிசம்பர் 08,2015,

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் தீவிர சட்டப்போராட்டத்தைத் தொடர்ந்து, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் தற்போது இரண்டாவது முறையாக 142 அடியை எட்டியுள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாயிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.

தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 தென் மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உயிர்நாடியாக விளங்கும் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த, முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா மேற்கொண்ட தொடர் சட்டப்போராட்டத்தின் பயனாக, அணையின் நீர்மட்டத்தை, 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியது.

உச்சநீதிமன்றம் அளித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை அடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 22-ம் தேதி முதல்முறையாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது.

இந்நிலையில், தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக, இரவு 8 மணியளவில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 2-வது முறையாக 142 அடியை எட்டியது.

அணைக்கு தற்போது விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் தமிழக பகுதிக்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு 2 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.