முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவிக்க அ.இ.அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு சிறப்பு ஏற்பாடு!

முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவிக்க அ.இ.அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு சிறப்பு ஏற்பாடு!

ஞாயிறு, பெப்ரவரி 21,2016,

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி தொலைபேசி மூலம் அவருக்கு வாழ்த்து தெரிவிக்க அ.இ.அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாள் வரும் 24-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. 

இதையொட்டி, முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதற்கான ஏற்பாடுகளை அ.இ.அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு செய்து வருகிறது. இதற்காக 77670 20002 மற்றும் 044 331 24234 ஆகிய சிறப்பு தொலைபேசி எண்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நாளை முதல் வரும் 24-ம் தேதி வரை இந்த எண்களை தொடர்பு கொண்டு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவிக்கலாம் என அ.இ.அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்பப் பிரிவு தெரிவித்துள்ளது.