முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாள்: மாநிலம் முழுவதும் உற்சாக கொண்டாட்டம்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாள்: மாநிலம் முழுவதும் உற்சாக கொண்டாட்டம்

புதன், பெப்ரவரி 24,2016,

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளையொட்டி, மாநிலம் முழுவதும் கழக நிர்வாகிகள் நள்ளிரவில் பிறந்தநாள் கேக் வெட்டியும், நலிந்தோர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி கழகம் சார்பில் ஆலத்தூரில் உள்ள 5,668 பேருக்கு 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் திரு.ப.மோகன் வழங்கினார். 

கோவை மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட P.N. புதூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், 8 ஆயிரம் ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி, சேலை, வீட்டு உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் திரு. S.P. வேலுமணி வழங்கினார். இதில், மாநகர் மாவட்ட செயலாளர் திரு. P.R.G. அருண்குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

சென்னை உலகத் தமிழ்ஆராய்ச்சி நிலையத்தில் தமிழ்தாய் 68 என்ற பெயரில் மாணவ மாணவியர்கள், ஊழியர்கள் பங்கேற்ற பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் திரு. K.C. வீரமணி, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். J. ஜெயவர்தன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

கிருஷ்ணகிரி மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் 68 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. மேலும் நலத்திட்ட உதவிகளும் ஏழைகளுக்கு வழங்கப்பட்டன. கைப்பந்து விளையாட்டுப்போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

தூத்துக்குடி மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில் நள்ளிரவில் மாவட்ட கழக அலுவலகம் முன்பு சர்வமத பிராத்தனை நடைபெற்றது. 68 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதில் அமைச்சர் திரு. S.P. சண்முகநாதன் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் கழக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. S. முத்துக்கருப்பன், திருமதி. வசந்தி முருகேசன் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். 

மதுரை சோழவந்தான் தொகுதி கழகம் சார்பில் சிறப்பு மருத்துவமுகாம் நடைபெற்றது. இதில் காது, மூக்கு, தொண்டை, உள்ளிட்வைகளுக்கு பரிசோதனையும், கண், நீரழிவு, சிறுநீர் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளும் செய்யப்பட்டன. 

பெரம்பலூர் ஒன்றிய அ.இ.அ.தி.மு.க சார்பில் செஞ்சேரி கிராமத்தில் 568 நபர்களுக்கு தையல் இயந்திரம், வேட்டி, சேலை, மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில அகராதி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாவட்ட கழகச் செயலாளர் திரு. ஆர்.டி. ராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. R.P. மருதராஜா ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து, அதேபகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி திரு. குமார் என்பவருக்கு அ.இ.அ.தி.மு.க. சார்பில், பெட்டிக்கடையும் வைத்து தரப்பட்டது. முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, பயனாளி நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொண்டார். 

கும்பகோணம் நகர கழகம் சார்பில் அலுவலகம் முன்பு 68 கிலோ கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் கழக நிர்வாகிளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அதிமுக சார்பில் அலுவலக வளாகத்தில் 68 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. பின்னர். கலை நிகழ்ச்சி மற்றும் வானவேடிக்கைகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலளார் திரு.N.தாளவாய் சுந்தரம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் சீர்காழி கழக மாணவரணி சார்பில் புடவைகள் வேட்டி, சமையல் பாத்திரங்கள் மற்றும் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன. இதில் சட்டமன்ற உறுப்பினர், மாணவரணியினர் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு 12 மணிக்கு பிரமாண்ட கேக் வெட்டியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கழக நிர்வாகிகள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். குத்தாலம் வடக்கு ஒன்றிய அ.இ.அ.தி.மு.க. சார்பில், திருவாலங்காட்டில் நடைபெற்ற முதலமைச்சர் பிறந்தநாள் விழாவில், ஆயிரத்து 68 நபர்களுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பின்னர் வண்ணமிகு வான வேடிக்கையும் நடைபெற்றது. 

திருவள்ளூர் மேற்கு மாவட்ட மகளிரணி சார்பில் இரவு 12 மணிஅளவில் வீரராகவர் கோவில் அருகே கேக் வெட்டியும் 568 பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டன. 

வேலூர் கிழக்கு மாவட்ட ஜெ.ஜெயலலிதா பேரவை சார்பில் நள்ளிரவு கூட்டு வழிபாடு நடைபெற்றது. இரவு 12 மணிக்கு ஆயிரத்து 500 கிலோ எடைகொண்ட கேக் வெட்டப்பட்டது. வண்ணமயமான வாணவேடிக்கை நிகழ்ச்சிகளுடன் கழக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடினர். 

கரூர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் முன்பு 68 கிலோ கேக் வெட்டப்பட்டு, முதலமைச்சரின் பிறந்தநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதில், கலந்து கொண்ட மாவட்ட செயலாளர் திரு. M.R. விஜயபாஸ்கர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டதுடன், முதலமைச்சரை வாழ்த்தி முழக்கங்களையும் எழுப்பினர். 

தென்சென்னை வடக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.கவின் சார்பில் தியாகராயர் நகரில் நள்ளிரவு 12 மணியளவில் கேக் வெட்டிக்கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் திரு. O.பன்னீர்செல்வம், திரு. நத்தம் R.விஸ்வநாதன், திரு.எடப்பாடி K. பழனிச்சாமி, திரு. R. வைத்திலிங்கம், திரு. P. பழனியப்பன், திருமதி. பா. வளர்மதி, திருமதி. S. கோகுல இந்திரா, அமைப்பு சேரா ஓட்டுநர் அணி செயலாளர் திரு. கமலக்கண்ணன், மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளும், முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டுப்போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்பட்டன. 

தென்சென்னை தெற்கு மாவட்டம் கழகம் சார்பில் சைதாப்பேட்டை குயவர்தெருவில் நடைபெற்ற பிறந்த நாளை விழாவில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கான ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.