முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஐந்து ஆண்டு சாதனைகளை, விளக்கி கூறி, 234 தொகுதிகளிலும் வரலாறு காணாத வெற்றி பெற உழைப்பதென அண்ணா தொழிற்சங்க பேரவை கூட்டத்தில் நிர்வாகிகள் சபதம்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஐந்து ஆண்டு சாதனைகளை, விளக்கி கூறி, 234 தொகுதிகளிலும் வரலாறு காணாத வெற்றி பெற உழைப்பதென அண்ணா தொழிற்சங்க பேரவை கூட்டத்தில் நிர்வாகிகள் சபதம்

சனி, மார்ச் 05,2016,

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் 5 ஆண்டு சாதனைகளை, வாக்காளர்களிடம் விளக்கி கூறி, 234 தொகுதிகளிலும் அ.இ.அ.தி.மு.க வரலாறு காணாத வெற்றி பெற அயராது உழைப்பதென அண்ணா தொழிற்சங்க பேரவை கூட்டத்தில், நிர்வாகிகள் சபதம் ஏற்றனர்.

திருச்சியில், அண்ணா தொழிற்சங்க பேரவையின் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பேரவையின் மாநில செயலாளர் திரு. ஆர்.சின்னசாமி எம்.எல்.ஏ., தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் திருச்சி மாநகர், திருச்சி புறநகர், பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய அரசு தலைமைக் கொறடா திரு. ஆர்.மனோகரன், திரு. சின்னசாமி எம்.எல்.ஏ. ஆகியோர், 234 தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் 5 ஆண்டு சாதனைகளை ஒவ்வொரு வாக்காளரிடமும் எடுத்துரைத்து, அனைத்து தொகுதிகளிலும் அ.இ.அ.தி.மு.க அமோக வெற்றிபெற, அயராது பாடுபட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். இதன்பின்னர், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான கழக அரசு மீண்டும் அமைய அண்ணா தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள் சபதம் ஏற்றுக் கொண்டனர்.