முதலமைச்சர் ஜெயலலிதாவின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் கழக அரசின் சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டங்கள் பல்வேறு மாவட்டங்களில் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் நடைபெற்று வருகின்றன

முதலமைச்சர் ஜெயலலிதாவின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் கழக அரசின் சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டங்கள் பல்வேறு மாவட்டங்களில் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் நடைபெற்று வருகின்றன

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் கழக அரசின் சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டங்கள் பல்வேறு மாவட்டங்களில் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் நடைபெற்று வருகின்றன.

சென்னை தேனாம்பேட்டையில், அமைப்புசாரா ஓட்டுனர்கள் அணி சார்பில் கழக அரசின் சாதனைகளை விளக்கும் பிரச்சார வாகனம் மற்றும் பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. இதில் கழக அமைப்புச் செயலாளர் டாக்டர் விசாலாட்சி நெடுஞ்செழியன், அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி செயலாளர் திரு. ஆர். கமலக்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வேலூர் கிழக்கு மாவட்ட வாலாஜாபேட்டை ஒன்றியக் கழகம் சார்பில் வானாபாடி பகுதியில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் மக்கள் நலத்திட்டங்கள், கழக அரசின் சாதனைகளை விளக்கும் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், வேலூர் கிழக்கு மாவட்டக்கழகச் செயலாளர், தலைமைக் கழகப் பேச்சாளர்கள் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கழக அரசின் சாதனைகளை விளக்கி உரையாற்றினர்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு, கேரளாவில் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், குமுளி, வண்டி பெரியார், ஏலப்பாறை, பீர்மேடு, தேவிகுளம், மூணார் கட்டப்பனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து அ.அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், கேரள வாக்காளர்களுக்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா எழுதிய கடிதத்தை அமைச்சர் திரு. S.P. வேலுமணி படித்துக் காண்பித்தார். இதனைக் கேட்ட கேரள வாக்காளர்கள் கரகோசம் எழுப்பி வரவேற்றனர். மேலும், தமிழகத்தில், தமிழக மக்களுக்கு கிடைத்த நலத்திட்டங்கள் அனைத்தும் கேரள மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் ஆவலை நடிகர் ராமராஜன் விளக்கிப் பேசினார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ஏராளமானோர் அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்தனர். முன்னதாக நடைபெற் றகலைநிகழ்ச்சி கேரள மக்கள் மற்றும் வெளிநாட்டினரை வெகுவாகக் கவர்ந்தது.