முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிறப்பான நடவடிக்கையால், கோபிசெட்டிப்பாளையத்தில் சுமார் 41 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு கால்வாய்களில் கான்கிரீட் தளம் – கடைமடைப் பகுதிவரை தண்ணீர் செல்ல வழிவகை செய்த முதலமைச்சருக்கே தங்கள் ஆதரவு என விவசாயிகள் உறுதி

முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிறப்பான நடவடிக்கையால், கோபிசெட்டிப்பாளையத்தில் சுமார் 41 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு கால்வாய்களில் கான்கிரீட் தளம் – கடைமடைப் பகுதிவரை தண்ணீர் செல்ல வழிவகை செய்த முதலமைச்சருக்கே தங்கள் ஆதரவு என விவசாயிகள் உறுதி

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சிறப்பான நடவடிக்கையால், கோபிசெட்டிப்பாளையத்தில் சுமார் 41 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு கால்வாய்களில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், கடைமடைப்பகுதிவரை தண்ணீர் தங்குதடையின்றி செல்ல வழிவகை ஏற்படுத்திக்கொடுத்த முதலமைச்சருக்கே தங்கள் ஆதரவு என விவசாயிகள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் முனைப்பான நடவடிக்கைகளால், தமிழகத்தில் இரண்டாம் பசுமைப்புரட்சியை ஏற்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண்கருவிகள், தட்டுப்பாடின்றி உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், விதைகள் உள்ளிட்டவைகள் வழங்கப்படுகின்றன. இதனால், வேளாண்துறையில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் திகழ்ந்து வருவதுடன், உணவு உற்பத்தியிலும் தன்னிறைவுபெற்று விளங்குகிறது.

அந்தவகையில், விவசாயம் சார்ந்த பகுதியான கோபிச்செட்டிப்பாளையத்திற்கு, முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் கீழ்பவானி வாய்க்கால், தட்டப்பள்ளி அரக்கன்கோட்டை வாய்க்கால் போன்றவற்றில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் கடைமடை பகுதிகளுக்கு செல்ல ஏதுவாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நடவடிக்கை மேற்கொண்டார். அதன்படி, வாய்க்கால்களில் 40 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது. இதேபோல், 17 கோடி ரூபாய் செலவில் கூகலூர் பகிர்மான கிளை வாய்க்கால்கள் அமைக்கப்பட்டன. இதனால் கடைமடைப்பகுதிகளுக்கு தண்ணீர் உரிய நேரத்திற்கு தங்குதடையின்றி செல்லும் நிலை உருவாகியுள்ளது.

மேலும் இங்கு விளையும் வாழை, தக்காளி, வெண்டைக்காய், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகளை சேமித்து வைக்கும் வகையில், குளிர்பதன கிடங்கு 4 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு 20 கோடி ரூபாய் மதிப்பில், மானியக்கடன்கள், டிராக்டர், பவர் டிரில்லர் உள்ளட்டவைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, விவசாய நிலங்களின் பரப்பளவு அதிகரித்துள்ளதுடன், விளைச்சலும் அதிகரித்துள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள இப்பகுதி விவசாயிகள், வரும் சட்டமன்றப் பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு முழுஆதரவை தெரிவித்துள்ளதுடன், இரட்டை இலை சின்னத்திற்கே வாக்களிக்கப்போவதாகவும் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.