முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க,மழையால் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களை கண்டறிந்து நிவாரண நிதி வழங்குவதற்கான கணக்கெடுப்புப் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க,மழையால் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களை கண்டறிந்து நிவாரண நிதி வழங்குவதற்கான கணக்கெடுப்புப் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

சனி, டிசம்பர் 12,2015,

முதலமைச்சர்  ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, சென்னையில் பெருமழையால் ஏற்பட்ட வெள்ளச் சேதங்களை கண்டறிந்து நிவாரண நிதி வழங்குவதற்கான கணக்கெடுப்புப் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் ஒருவாரத்தில் நிறைவடையும் என ஊழியர்கள் தெரிவித்தனர்.

வடகிழக்கு பருவமழையால் சென்னை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளச் சேதங்களை கண்டறிந்து உரிய நிவாரண நிதி வழங்கிட, முதலமைச்சர் ஜெ ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தொல்லியல்துறை ஆணையர் திரு. டி. கார்த்திகேயன் மற்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண் இயக்குநர் திருமதி. மைதிலி கே. ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் சேதங்களை கணக்கிடும் பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 21 மாவட்டங்களைச் சேர்ந்த 3,148 அலுவலர்கள், வீடு வீடாகச் சென்று தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

கணக்கெடுக்கும் பணிகளை மேற்கொள்ளும் அலுவலர்களை கண்காணிக்க 21 மாவட்ட வருவாய் அலுவலர்களும், 21 துணை ஆட்சியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும், ஒரு லட்சத்து 3 ஆயிரம் வீடுகளில் கணக்கெடுக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன. சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்குவதற்கான கணக்கெடுப்புப் பணிகள் ஒரு வாரத்தில் நிறைவடையும் என, அந்தப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் தெரிவித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வெள்ள நிவாரண கணக்கெடுப்புப் பணியை 10 மாவட்ட வருவாய் அலுவலர்கள், 35 துணை ஆட்சியர் நிலை அலுவலர்கள் உட்பட 3,500 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்த கணக்கெடுப்புப் பணிகளை கண்காணிப்பதற்காக, சுற்றுலா மற்றும் பண்பாட்டு, இந்து சமய அறநிலையத்துறைச் செயலாளர் திரு. கே. ராஜாராமன், நியமிக்கப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ள நிவாரண கணக்கெடுப்புப் பணியில் சார் ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரிகள் 30 பேர் அடங்கிய குழுவினர் தலைமையில் 180 கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட 2,910 அலுவலர்கள் ஈடுபட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் திரு. வீரராகவ ராவ் தெரிவித்தார். முன்னதாக அவர், தண்டல்கழனி பகுதியில் நடைபெற்ற கணக்கெடுக்கும் பணியை ஆய்வு செய்தார்.