முதலமைச்சர் ஜெயலலிதாவின் சீரிய திட்டமான அம்மா சிமெண்ட்டுக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு – வேலூரில் 74 ஆயிரம் மெட்ரிக் டன் விற்பனையாகி சாதனை

முதலமைச்சர் ஜெயலலிதாவின் சீரிய திட்டமான அம்மா சிமெண்ட்டுக்கு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பு – வேலூரில் 74 ஆயிரம் மெட்ரிக் டன் விற்பனையாகி சாதனை

திங்கட்கிழமை, டிசம்பர் 21,

முதலமைச்சர் ஜெயலலிதாவின் சீரிய திட்டமான அம்மா சிமெண்ட் திட்டம், கிராமப்புறங்களில் குடிசை வீடுகள் கான்கிரீட் வீடுகளாக மாறி வருவதால், பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் மட்டும் 73,721 மெட்ரிக் டன் அம்மா சிமெண்ட் இதுவரை விற்பனையாகியுள்ளது.

ஏழை-எளிய மக்களின் வீடுகட்டும் கனவை, நினைவாக்கும் வகையில், முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த மலிவு விலையிலான அம்மா சிமெண்ட் திட்டம், பொதுமக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தால், வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளதோடு, கட்டுமானத்துறையும் புத்துணர்ச்சி பெற்றுள்ளது. நாட்டிற்கு முன்னோடி திட்டமாக திகழும் இந்த திட்டம் மூலம் வெளிச்சந்தையில் சிமெண்ட் விலை உயர்வை தடுக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் மட்டும் 73,721 மெட்ரிக் டன் சிமெண்ட், இதுவரை விற்பனையாகியுள்ளது.

அம்மா சிமெண்ட் திட்டத்தால் கிராமப்பகுதிகளில் குடிசை வீடுகள், கான்கிரீட் வீடுகளாக மாறி வருவது கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்.

பதிவுத் தேதியை அடிப்படையாகக் கொண்டு பயனாளிகளுக்கு சிமெண்ட் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகம் மற்ற இதரத்துறைகள் ஒருங்கிணைந்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.