முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேண்டுகோளை ஏற்று அனைத்து தொகுதிகளிலும் அ.இ.அ.தி.மு.க.வின் வெற்றிக்காக அயராது பாடுபடுவோம்:கழகத் தொண்டர்கள் சூளுரை

முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேண்டுகோளை ஏற்று அனைத்து தொகுதிகளிலும் அ.இ.அ.தி.மு.க.வின் வெற்றிக்காக அயராது பாடுபடுவோம்:கழகத் தொண்டர்கள் சூளுரை

ஞாயிறு, ஜனவரி 03,2016,

அ.இ.அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா ஆற்றிய எழுச்சிமிகு உரையைத் தொடர்ந்து, அ.இ.அ.தி.மு.க.வின் வெற்றிக்காக அயராது களப்பணியாற்றுவதை சிரமேற்கொண்டு, உறுதியுடன் செயல்படுவோம் என கழகத் தொண்டர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் புத்தாண்டு தினத்தில் சூளுரை ஏற்றுள்ளனர். வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும் அ.இ.அ.தி.மு.க.வின் வெற்றிக்காக அயராது பாடுபடுவோம் என்றும் அவர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் தமது தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. அரசு செயல்படுத்திவரும் எண்ணற்ற நலத்திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறுவதுடன், கழக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கட்டவிழ்த்துவிடும் பொய்ப்பிரச்சாரத்தை முறியடித்து, வரும் சட்டமன்றத் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. மகத்தான வெற்றியைப் பெறும் வகையில், கழகத் தொண்டர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா, சென்னையில் நடைபெற்ற கழக செயற்குழு-பொதுக்குழுக் கூட்டத்தில் எழுச்சிமிகு உரையாற்றினார். அ.இ.அ.தி.மு.க.வுக்கு என்றென்றும் வெற்றிதான், எப்போதும் பெருமைதான் என சூளுரைத்த முதலமைச்சர் ஜெயலலிதா, அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள் ஒவ்வொரு வரும் பெருமையடைய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் இந்த எழுச்சிமிகு உரை, அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே மகத்தான வரவேற்பையும், புதிய உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேண்டுகோளை ஏற்று அனைத்து தொகுதிகளிலும் அ.இ.அ.தி.மு.க.வின் வெற்றிக்காக அயராது பாடுபடுவோம் என கழகத் தொண்டர்களும் சூளுரைத்தனர்.