முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிறப்பான நடவடிக்கையால் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்திற்கு, சிறந்த கட்டமைப்பு, கல்வித் தரத்திற்கான “12-B Status” அந்தஸ்து கிடைத்துள்ளது

முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிறப்பான நடவடிக்கையால் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்திற்கு, சிறந்த கட்டமைப்பு, கல்வித் தரத்திற்கான “12-B Status” அந்தஸ்து கிடைத்துள்ளது

சனி , ஜனவரி 09,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கைகளால் சிறந்த கட்டமைப்பு மற்றும் கல்வி தரத்திற்கான “12-B Status” அந்தஸ்த்தை தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழகம் பெற்றுள்ளது.

தொலைதூர கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில், முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழகம் மிகச்சிறப்பாக சேவையாற்றி வருகிறது. இந்த சேவைகளை அங்கீகரிக்கும் வகையில், UGC குழு ஒன்று கடந்த மே மாதம் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழகத்திற்கு வருகை தந்து அதன் கட்டமைப்பு மற்றும் கல்வி தரத்தினை ஆய்வு செய்தது. இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழகத்திற்கு “12-B Status” என்ற அந்தஸ்த்தை வழங்கியுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் காரணமாக, தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் சிறப்பான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, கல்வித்தரம் உயர்வடைந்துள்ளதாகவும், இதன் காரணமாக “12-B Status” கிடைத்துள்ளதாகவும் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக் கழக துணைவேந்தர் டாக்டர் சந்திரகாந்தா ஜெயபாலன் தெரிவித்துள்ளார்.