முதலமைச்சர் ஜெயலலிதாவுடன், தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சந்திப்பு

முதலமைச்சர் ஜெயலலிதாவுடன், தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சந்திப்பு

வெள்ளி, பெப்ரவரி 12,2016,

முதலமைச்சர் ஜெயலலிதாவை, தலைமைச் செயலகத்தில் இன்று, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் குடும்பத்தினருடன் சந்தித்தார்.

முதலமைச்சர் ஜெயலலிதாவை, இன்று தலைமைச் செயலகத்தில், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் குடும்பத்தினருடன் சந்தித்து, தனது மகன் திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தவேண்டும் என கேட்டுக்கொண்டு, திருமண அழைப்பிதழை வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

எனது மகன் டாக்டர் சுகநாதன் திருமண அழைப் பிதழை வழங்குவதற்கு முதல்-அமைச்சரிடம் அனுமதி கேட்டு இருந்தோம். அதற்கு முதல்-அமைச்சர் இன்று அனுமதி தந்து இருந்தார். அதன்படி நான் எனது கணவர் டாக்டர் சவுந்தரராஜன், மகன் சுகநாதனுடன் வந்து முதல்-அமைச்சரை சந்தித்து அழைப்பிதழை வழங்கி னோம். அவர் மிகுந்த அன்போடு அழைப்பிதழை பெற்றுக் கொண்டார்.

17-ந் தேதி காலையில் காமராஜர் அரங்கில் திருமணம். மாலையில் வரவேற்பு என்று சொல்லி திருமணத்தில் பங்கேற்க அழைத்தோம். அதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கண்டிப்பாக திருமணத்துக்கு வருகிறேன் என்று கூறி மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்.