மதுரையில் அ.இ.அ.தி.மு.க. மகளிரணி சார்பில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் :முதலமைச்சர் ஜெயலலிதாவை மீண்டும் அரியணையில் அமர்த்துவதே தங்கள் லட்சியம் என சூளுரை

மதுரையில் அ.இ.அ.தி.மு.க. மகளிரணி சார்பில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் :முதலமைச்சர் ஜெயலலிதாவை மீண்டும் அரியணையில் அமர்த்துவதே தங்கள் லட்சியம் என சூளுரை

வெள்ளி, மார்ச் 11,2016,

மதுரை மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. மகளிரணி சார்பில் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கழக அரசின் சாதனைகளை எடுத்துரைத்து, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை மீண்டும் அரியணையில் அமர்த்துவதே தங்கள் லட்சியம் என கூட்டத்தில் பங்கேற்ற பெண்களும், திருநங்கைகளும் சூளுரைத்துள்ளனர்.

வரும் சட்டமன்றத் தேர்தலில், 234 தொகுதிகளிலும் அ.இ.அ.தி.மு.க.வை அமோக வெற்றிபெறச் செய்யும் நோக்கில், தேர்தல் களப்பணியாற்றுவது குறித்து, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மதுரை மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. மகளிரணி சார்பில், மாவட்ட கழக அலுவலகத்தில், சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் திரு. செல்லூர் கே. ராஜு தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், களப்பணியாற்றுவது குறித்தும் விளக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பங்கேற்ற ஏராளமான பெண்கள், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சரித்திர சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துரைத்து, அனைத்து தொகுதிகளிலும் அ.இ.அ.தி.மு.க. வரலாற்று வெற்றியை பெறும் வகையில் அயராதுபாடுபடுவோம் என சூளுரைத்தனர்.

இக்கூட்டத்தில் திருநங்கைகள் பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், திருநங்கைகளின் நலனுக்காக உதவித்தொகை, குடியிருப்புகள், வேலைவாய்ப்புகள் என எண்ணற்ற சலுகைகளை வழங்கிவரும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, மீண்டும் அரியணையில் அமர்ந்திட அரும்பாடுபடுவோம் என திருநங்கைகள் உறுதியேற்றனர்.