முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுக-வில் இணைந்தார் புதுச்சேரி காங்கிரஸ் முன்னாள் எம்பி கண்ணன்

முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுக-வில் இணைந்தார் புதுச்சேரி காங்கிரஸ் முன்னாள் எம்பி கண்ணன்

ஞாயிறு, பெப்ரவரி 14,2016,

புதுச்சேரி காங்கிரஸ் முன்னாள் எம்பி கண்ணன், ஜெயலலிதா முன்னிலையில் அதிமுக-வில் இணைந்தார்.  அப்போது, அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், ஆர்.வைத்திலிங்கம், புதுச்சேரி மாநிலக் கழகச் செயலாளர் பெ.புருஷோத்தமன் ஆகியோர் உடனிருந்தனர்.

இவர் புதுச்சேரி சட்டப்பேரவையின் சபாநாயகராகவும், அமைச்சரகாவும் அதன்பின்னர் மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.