முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்து செயல்படுத்திவரும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு தமிழக விளையாட்டு வீரர் – வீராங்கனைகள் நெஞ்சார்ந்த நன்றி

முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்து செயல்படுத்திவரும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு தமிழக விளையாட்டு வீரர் – வீராங்கனைகள் நெஞ்சார்ந்த நன்றி

தமிழக விளையாட்டு வீரர் – வீரங்கானைகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்து செயல்படுத்திவரும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு, தமிழக விளையாட்டு வீரர் – வீராங்கனைகள் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுபடி, 85 லட்சம் ரூபாய் செலவில், விளையாட்டு வீரர்களுக்கு புதிய தங்கும் விடுதி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு, கூடைப்பந்து, கையெறி பந்து ஆகிய தளங்களும் பளூ-தூக்கும் தளமும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் வீரர்- வீராங்கனைகள் பயிற்சியினை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர். தங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், இவைகளை ஏற்படுத்திகொடுத்த, முதலமைச்சருக்கு விளையாட்டு வீரர்- வீராங்கனைகள் நன்றி தெரிவித்துள்ளனர். புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டு விடுதியில், மாணவ-மாணவிகளுக்கு தரமான உணவு, குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.