முதலமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய இ சேவை மையங்கள் மூலம் தங்களுக்கு தேவையான சான்றிதழ்கள் உடனடியாக கிடைப்பதாக பொதுமக்கள் மகிழ்ச்சி

முதலமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய இ சேவை மையங்கள் மூலம் தங்களுக்கு தேவையான சான்றிதழ்கள் உடனடியாக கிடைப்பதாக பொதுமக்கள் மகிழ்ச்சி

வெள்ளி , ஜனவரி 15,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, செயல்பட்டு வரும் இ சேவை மையங்கள் மூலம் காலவிரயமின்றி தங்களுக்கு தேவையான சான்றிதழ்கள் கிடைப்பதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். வேலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் இ சேவை மையங்கள் மூலம் 4 லட்சத்து 35 ஆயிரம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழக மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் முதலமைச்சர் ஜெயலலிதா, அரசு சான்றிதழ்களை பெறுவதற்காக மக்கள் காலத்தை விரையம் செய்யாமல் இருப்பதற்காக இ சேவை மையங்களை அறிமுகப்படுத்தினார். மாவட்டந்தோறும் இயங்கி வரும் இந்த மையங்கள் தோறும் உடனுக்குடன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் 512 மையங்கள் மூலம், 4 லட்சத்து 35 ஆயிரம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. முதலமைச்சரின் நடவடிக்கையால், தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை உடனுக்குடன் பெற முடிவதாகவும், இதற்காக முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்வதாகவும் வேலூர் மாவட்ட மக்கள் தெரிவித்தனர்.