முதலமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய பசுமைக்குடில் திட்டத்தின் மூலம் 3 மடங்கு விளைச்சலும், லாபமும் கிடைப்பதால் முதலமைச்சருக்கு, விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றி

முதலமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய பசுமைக்குடில் திட்டத்தின் மூலம் 3 மடங்கு விளைச்சலும், லாபமும் கிடைப்பதால் முதலமைச்சருக்கு, விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றி

திங்கள் , ஜனவரி 18,2016,

மழையை எதிர்நோக்கி விவசாயம் செய்து வரும் மானாவாரி விவசாயிகள், ஆண்டு முழுவதும் சாகுபடி செய்யும் வகையில், முதலமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தியுள்ள பசுமை குடில் திட்டம், தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் இரண்டாம் பசுமை புரட்சியை ஏற்படுத்த, விவசாயத்துறையில் எண்ணற்ற திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தியதுடன், விவசாயிகளுக்கு மானியம் போன்ற சலுகைகளையும் வழங்கி வருகிறார். இதனால், மழை பெய்தால் மட்டுமே விவசாயம் என்று இருந்த மானாவாரி நிலங்கள், இன்று பசுமை பிரதேசங்களாக மாறி வருகின்றன. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் தாலுகாவில், மானாவாரி நிலங்களில் இப்போது அரசு தோட்டக்கலைத்துறை மூலம் பசுமை குடில் திட்ட விவசாயம் என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகள் ஆண்டு முழுவதும் பயிர்செய்து நல்லப் பயன் அடையமுடிகிறது. மேலும், எல்லா தட்பவெப்பநிலைகளையும் தாங்கும் வகையில் குடில் அமைக்கப்பட்டு பயிர் செய்யப்படுவதால், விவசாயிகளுக்கு வழக்கத்தைக் காட்டிலும் 3 மடங்கு விளைச்சலும், லாபமும் கிடைத்து வருகிறது. இதனால், விளாத்திக்குளம், மேலக்கரந்தை, தரிசல்குளம் போன்ற பகுதிகளில் விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். மலைப் பிரதேசங்களில் மட்டுமே விளையம் கேரட், பூக்கள் போன்ற பயிர்களும் பசுமைக் குடில் திட்டத்தின் மூலம் எளிதில் பயிர் செய்ய முடிகிறது. பசுமைக் குடில் மூலம் விவசாயப் பண்ணை அமைக்க கூடுதல் செலவாகும் என்பதால், முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, விவசாயிகளுக்கு 67 சதவீதம் வரை மானியம் வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது.

முதலமைச்சரின் இந்த சீரிய திட்டத்தின் காரணமாக, சோளம், கம்பு போன்ற மானாவாரி பயிர்களை மட்டுமே சாகுபடி செய்து வந்த விளாதிக்குளம் பகுதி விவசாயிகள், மலைப் பகுதிகளில் விளையும் பயிர்களையும் சாகுபடி செய்து அதிக லாபம் ஈட்டு வருகின்றனர். இதனால், இத்திட்டத்தை அறிமுகப்படுத்திய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.