முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க வரும் 28-ம் தேதி நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்லக்காபாளையத்தில் நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க வரும் 28-ம் தேதி நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்லக்காபாளையத்தில் நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணைக்கிணங்க, இம்மாதம் 28-ம் தேதி நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில், பல்லக்காபாளையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. முகாம் நடைபெறவுள்ள இடத்தை பார்வையிட்ட அமைச்சர் திரு. P. தங்கமணி, அனைத்துத் துறை அதிகாரிகளுடன், முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா உத்தரவுப்படி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்க அரசின் வேலைவாய்ப்பு, பயிற்சித்துறை மற்றும் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் திறன்மேம்பாட்டிற்கான பயிற்சி முகாம், பல்லக்காபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் வரும் 28-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், ஐ.டி.ஐ., பட்டயப்படிப்பு, கலை அறிவியல் பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், மருத்துவத்துறை பட்டதாரிகள், ஆசிரியர்கள், ஓட்டுனர்கள் மற்றும் தையல் பயிற்சி முடித்தோர் பங்கேற்கலாம்.

சென்னை, கோவை, திருச்சி, ஓசூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். மேலும், திறன்மேம்பாட்டு பயிற்சியும் வழங்கப்படவுள்ளது. எனவே, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த முகாமில் பங்கேற்பார்கள் என்பதால், முகாம் நடைபெறவுள்ள இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு நடவடிக்கைகளை பார்வையிட்ட அமைச்சர் திரு. P. தங்கமணி, நாடாளுமன்ற உறுப்பினர் திரு. P.R. சுந்தரம், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். முகாமிற்கு வருபவர்களுக்கு குடிநீர் வசதி, உணவு மற்றும் இலவச பேருந்து வசதி வழங்குவது குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.