முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைப்படி கிராமங்களில் குளிரூட்டும் கலன்கள் அமைக்கப்பட்டுள்ளதால் கறவை மாடுகளின் ஒருசொட்டு பால்கூட வீணாகாமல் தடுப்பு : முதலமைச்சருக்கு பால் உற்பத்தியாளர்கள் நெஞ்சார்ந்த நன்றி

முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைப்படி கிராமங்களில் குளிரூட்டும் கலன்கள் அமைக்கப்பட்டுள்ளதால் கறவை மாடுகளின் ஒருசொட்டு பால்கூட வீணாகாமல் தடுப்பு : முதலமைச்சருக்கு பால் உற்பத்தியாளர்கள் நெஞ்சார்ந்த நன்றி

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணைப்படி, கிராமங்களில் குளிரூட்டும் கலன்கள் அமைக்கப்பட்டுள்ளதால், கறவை மாடுகளின் ஒருசொட்டு பால்கூட வீணாகாமல் தடுக்கப்பட்டுள்ளது. தங்கள் வாழ்வில் பால்வார்த்த முதலமைச்சருக்கு, பால் உற்பத்தியாளர்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.

கிராமப்புறங்களில் வாழும் ஏழை மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக விலையில்லா கறவை மாடுகள், தொடக்க வேளாண் சங்கங்கள் மூலம் குறைந்த வட்டியில் மாடுகள் வாங்க கடன், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் மானிய விலையில் கறவை மாடுகள் வழங்கும் திட்டம் என பல திட்டங்களை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா செயல்படுத்தி வருகிறார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம், பால் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் பகுதிகளில் ஒன்றாகும். இங்கு ஒருசொட்டு பால்கூட வீணாகாமல் இருப்பதற்காக, அதனை சேமித்து வைக்க குளிரூட்டு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அய்யம்புதூர், ஒட்டர்கரட்டுப்பாளையம், வேம்பாண்டான்பளையம், திருமநாதம்பாளையம், கூடக்கரை, எலத்தூர், பெட்டையம்பாளையம் உள்ளிட்ட இடங்களில், ஒருகோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 5 ஆயிரம் லிட்டர் பாலை சேமித்து வைக்கும் குளிரூட்டும் கலன்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், கிராமங்களில் பால் உற்பத்தி அதிகரித்துள்ளது. மானியம் மற்றும் கடனுதவி காரணமாக, கறவை மாடுகளின் எண்ணிக்கையும் இருமடங்காக உயர்ந்துள்ளது.