முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க,வேலூரில் மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு 6,10,000 ரூபாய் சுழல் நிதி வழங்கப்பட்டது. பயனாளிகள் முதலமைச்சருக்கு நன்றி

முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க,வேலூரில் மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு 6,10,000 ரூபாய் சுழல் நிதி வழங்கப்பட்டது. பயனாளிகள் முதலமைச்சருக்கு  நன்றி

திங்கள் , ஜனவரி 18,2016,

மகளிரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க, மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வேலூரில் சுழல் நிதி வழங்கப்பட்டது. நிதியுதவியைப் பெற்றுக்கொண்ட பெண்கள், முதலமைச்சருக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்தனர்.

தமிழகத்தில் சமூக பொருளாதாரத்தில் பெண்கள் முன்னேற்றமடைய வேண்டும் என்ற நோக்கிலும், அவர்கள் சுயதொழில் செய்து வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ளவும் ஏதுவாக முதலமைச்சர் ஜெயலலிதா எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அவற்றில் ஒன்றுதான் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு குறைந்த வட்டியில் சுழல் நிதி வழங்கும் திட்டமாகும். அதன்படி, வேலூர் மாநகராட்சியில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின்கீழ் மகளிர் சுய உதவிக்குழுவினர் சிறுதொழில் செய்யவதற்காக சுழல் நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகராட்சி மேயர் திருமதி கார்த்தியாயினி மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 6 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் சுழல் நிதி வழங்கப்பட்டது. நிதியுதவியைப் பெற்றுக்கொண்ட மகளிர், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.