முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க,மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பயண டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்:அமைச்சர் பி.தங்கமணி நேரில் ஆய்வு

முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க,மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பயண டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்:அமைச்சர் பி.தங்கமணி நேரில் ஆய்வு

செவ்வாய் , பிப்ரவரி 23, 2016,

முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க, சென்னையில் உள்ள போக்குவரத்துக்கழக டெப்போக்களில், மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பயண பேருந்து டோக்கன் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. சென்னை அடையாறில் உள்ள டெப்போவில் பேருந்து டோக்கன்கள் வழங்கும் பணிகளை நேற்று அமைச்சர் திரு. பி.தங்கமணி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னையில் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பயணம் செய்ய கட்டணமில்லா பஸ்பாஸ் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், முதலமைச்சர் ஜெயலலிதா, 5 மூத்த குடிமக்களுக்கு அடையாள அட்டை மற்றும் டோக்கன்களை வழங்கி இத்திட்டத்தை அண்மையில் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து, சென்னையில் உள்ள அனைத்து பேருந்து டெப்போக்களிலும் மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பஸ் பாஸ் வழங்கும்பணி நேற்று தொடங்கியது. சென்னை அடையாறில் உள்ள டெப்போவில் கட்டணமில்லா பஸ் டோக்கன்கள் வழங்கும் பணியினை அமைச்சர் திரு. பி.தங்கமணி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். கட்டணமில்லா பஸ் டோக்கன்களைப் பெற்றுக்கொண்ட பயனாளிகள், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தனர்.