முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க,20,000 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு விரைவில் கைபேசிகள் வழங்க ஏற்பாடு!

முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க,20,000 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களுக்கு விரைவில் கைபேசிகள் வழங்க ஏற்பாடு!

செவ்வாய், மார்ச் 01,2016,

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணைக்கிணங்க, தமிழகம் முழுவதும் உள்ள சமுதாய சுயஉதவிக்குழு பயிற்றுநர்களுக்கு கைபேசி வழங்குவதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. விரைவில் 20 ஆயிரம் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு கைபேசிகள் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், சமுதாய சுயஉதவிக்குழு பயிற்றுநர்களுக்கு, “அம்மா கைபேசிகள்” வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இத்திட்டத்தை கடந்த 27-ம் தேதி தொடங்கி வைத்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, 20 ஆயிரம் பேருக்கு “அம்மா கைபேசிகள்” வழங்கும் அடையாளமாக, 3 பேருக்கு கைபேசிகளை வழங்கி, திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அதனால், தி.மு.க.வின் மு.க. ஸ்டாலின், எப்போதும்போல, தமிழக அரசின் இந்த சீரிய திட்டத்தை விமர்சித்து, தனது முகநூல் பதிவில் கருத்து வெளியிட்டுள்ளார். ஆனால், ஸ்டாலினின் இந்த கருத்துக்கு மறுப்பு தெரிவித்து, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர், திருமதி. அமுதவள்ளி அளித்துள்ள பேட்டியில், தலா 3 ஆயிரத்து 850 ரூபாய் வீதம் மொத்தம் 20 ஆயிரம் கைபேசிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அனைத்து மகளிர் சுய உதவிக்குழுவினரின் செயல்பாடுகள், கணக்கு வழக்குகள், அம்மா கைபேசியில் இணைக்கப்பட்டுள்ள செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம் என்றும் திருமதி. அமுதவள்ளி தெரிவித்தார்.