முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் குறித்து மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி,பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் நேரில் விசாரிப்பு

முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் குறித்து மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி,பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா  ஆகியோர் நேரில் விசாரிப்பு

புதன்,அக்டோபர் 12,2016,

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஜெயலலிதாவை பார்க்க தினமும் அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில்,முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிய டெல்லியில் இருந்து பாஜக கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி ஆகியோர் இன்று விமானம் மூலம் சென்னை வந்தனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து காரில் அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்ற அமித்ஷா மற்றும் அருண்ஜெட்லி  மருத்துவர்கள் மற்றும் அமைச்சர்களின் உடல் நிலை குறித்து கேட்டறிந்துவிட்ட டெல்லி திரும்பினர். அவர்களுடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்டோரும் மருத்துவ மனைக்கு சென்றனர்.