முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி,ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மினி டிராக்டர், பவர் டில்லர் வழங்கப்பட்டன

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி,ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மினி டிராக்டர், பவர் டில்லர் வழங்கப்பட்டன

சனி,நவம்பர்,28-2015

 

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு மினி டிராக்டர், பவர் டில்லர் போன்ற விவசாயக் கருவிகள் வழங்கப்பட்டன

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, வேளாண் துறைக்கு மிகுந்த முன்னுரிமை கொடுத்து பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக விவசாயிகளுக்கு மானிய விலையில் டிராக்டர், மினி டிராக்டர் போன்ற விவசாயக் கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 16 விவசாயிகளுக்கு பவர் டில்லர்களும், 5 விவசாயிகளுக்கு மினி டிராக்டர்களும் மானிய விலையில் வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் திரு. நந்தகுமார் வழங்கிய இந்தக் கருவிகளை, பெற்றுக் கொண்ட விவசாயிகள், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்தனர்.