முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணி தீவிரம்

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, தமிழகம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணி தீவிரம்

ஞாயிறு, நவம்பர் 29,2015,

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி, தமிழகம் முழுவதும், விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சர் திரு. R. வைத்திலிங்கம் வழங்கினார். விலையில்லா கல்வி வழிகாட்டு கையேடுகளும் வழங்கப்பட்டன.

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட மகபூப்பாளையம் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. அமைச்சர் திரு. செல்லூர் K. ராஜு, மேயர் திரு. ராஜன்செல்லப்பா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சியில், 800-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு, விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகளை அமைச்சர் திரு. R. காமராஜ் வழங்கினார். இவற்றை பெற்றுக் கொண்ட பயனாளிகள், முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் 3,352 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகளை அமைச்சர் திரு. N. சுப்பிரமணியன் வழங்கினார். மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆயிரத்து 682 பயனாளிகளுக்கு, முதலமைச்சரின் நிவாரண நிதியுதவி மற்றும் தாலிக்குத் தங்கம் வழங்கப்பட்டது. அமைச்சர் திரு.K.C. வீரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பிரம்மபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவல்லம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

கே.வி.குப்பம், பசுமாத்தூர், ஐதர்புரம், கருதப்பட்டு உள்ளிட்ட இடங்களில் சுமார் ஆயிரத்து 900 பயனாளிகளுக்கு, விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள், மடிக்கணினிகளை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிகாரிகள் வழங்கினர்.

திருச்சி குளாப்பட்டி பகுதியிலிருந்து கே.கே.நகர், எல்.ஐ.சி, பாலக்கரை வழியாக, மத்திய பேருந்து நிலையத்திற்கு புதிய வழித்தடத்தில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணைக்கிணங்க, பேருந்து வசதியை, அரசு தலைமைக்கொறடா திரு. ஆர். மனோகரன் தொடங்கி வைத்தார்.

நெல்லை மாவட்டம் சங்கர் நகரில் உள்ள அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.