முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி ஈரோடு மாவட்டம் சாலைப்புதூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க விவசாயிகளுக்கு, தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி ஈரோடு மாவட்டம் சாலைப்புதூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க விவசாயிகளுக்கு, தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி, ஈரோடு மாவட்டம் சாலைப்புதூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க விவசாயிகளுக்கு, தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது.

தீபாவளி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், பொதுத்துறை ஊழியர்களுக்கு போனஸ் வழங்க முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணைக்கிணங்க, ஈரோடு மாவட்டம் சாலைப்புதூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் உள்ள 350 உறுப்பினர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆவின் தலைவர், பால் கூட்டுறவு சங்கத் தலைவர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.