முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள், நியாயவிலைக் கடைகள் மூலம் விநியோகம் : முதலமைச்சருக்கு பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றி

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள், நியாயவிலைக் கடைகள் மூலம் விநியோகம் : முதலமைச்சருக்கு பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றி

வியாழன் , டிசம்பர் 10,2015,

முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா உத்தரவின்பேரில், மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள், நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக முதலமைச்சருக்கு பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்கும் வகையில், முதலமைச்சர் செல்வி. ஜெ. ஜெயலலிதா உத்தரவின் பேரில், 90 பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடிகள் மற்றும் 13 நகரும் அங்காடிகள் மூலமாக காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கூடுதலாக 100 டன் உருளைகிழங்கு, 75 டன் வெங்காயம் ஆகியவற்றை வெளி மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்து பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடிகள் மற்றும் நகரும் அங்காடிகள் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நியாயவிலைக் கடைகளிலும் மலிவு விலையில் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு கிடைக்கும் வகையில், இன்றிலிருந்து விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ உருளைக்கிழங்கு 23 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெங்காயம் 28 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதாவுக்கு பொதுமக்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.