முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி மாநிலம் முழுவதும் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி மாநிலம் முழுவதும் தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது

வியாழக்கிழமை, டிசம்பர் 17, 2015,

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, மாநிலம் முழுவதும் பயனாளிகளுக்கு தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

திருவள்ளுர் மாவட்டம் ஆவடியில், 797 மாண-மாணவிகளுக்கு விலையில்லா மடிகணினிகள் வழங்கப்பட்டன.

பெரம்பலூரில், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 27 மாற்றுத்திறனாளிகளுக்கு, விலையில்லா ஸ்கூட்டர், காதொலை கருவிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

விருதுநகர் மாவட்டத்தில் 227 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிகணினிகள் வழங்கப்பட்டன.

வேலூர் மாவட்டம் பூட்டுத்தாக்கு, ராசத்துபுரம், வள்ளுவம்பாக்கம், ராணிப்பேட்டை, புளியகண்ணு ஆகிய பகுதிகளில், 684 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிகணினிகள் வழங்கப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், 350 பேருக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்காந்த அடுப்புகள் வழங்கப்பட்டன.

கொடைக்கானல் பகுதியை ஒட்டியுள்ள, பண்ணைக்காடு, பாச்சலூர், கே.சி.பட்டி ஆகிய மலைகிராம மக்கள் பயன்பெறும் வகையில், புதிய போக்குவரத்து வழிதடம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கிராமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், கனமழையினால் சேதமடைந்த நீதிமன்ற சாலையை, 75 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில், 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான வேளாண் கருவிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில், 479 பேருக்கு, விலையில்லா மடிகணினிகள் வழங்கப்பட்டன.