முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி,கனமழையினால் சேதமடைந்த 42 படகுகளின் உரிமையாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை அமைச்சர் கே.ஏ.ஜெயபால் வழங்கினார்

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி,கனமழையினால் சேதமடைந்த 42 படகுகளின் உரிமையாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை அமைச்சர் கே.ஏ.ஜெயபால் வழங்கினார்

செவ்வாய், டிசம்பர் 22,2015,

நாகை மாவட்டத்தில், கனமழையினால் சேதமடைந்த 42 படகுகளின் உரிமையாளர்களுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, முதற்கட்டமாக, 50 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

நாகை மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையினால், கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் சேதமடைந்திருந்தன. மீனவர்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து, முதற்கட்டமாக, 42 படகுகளின் உரிமையாளர்களுக்கு, 50 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை அமைச்சர் திரு. கே.ஏ. ஜெயபால் வழங்கினார்.