முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும் ஏழை-எளியோருக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் பணி தீவிரம்

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும் ஏழை-எளியோருக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் பணி தீவிரம்

வியாழக்கிழமை, ஜனவரி 07, 2016,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும் ஏழை-எளியோருக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 6 ஆயிரம் பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி, சேலைகளை அமைச்சர் டாக்டர் எஸ். சுந்தரராஜ் வழங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கந்தன்சாவடி, பள்ளிக்கரணை பகுதிகளில், 2 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன.

விருதுநகர் மாவட்டம், சொக்கனாம்புதூர், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில், ஆயிரத்து 880 பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன.

மதுரை மாவட்டம், தாதம்பட்டி பகுதியில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன.

நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட டவுண் பகுதியில், ஆயிரத்து 500 பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆயிரத்து 523 பயனாளிகளுக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன.

வேட்டி-சேலைகளைப் பெற்றுக் கொண்டவர்கள், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்தனர்.