முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும் மாணவ-மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகளும், ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழகம் முழுவதும் மாணவ-மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகளும், ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன

வெள்ளி, ஜனவரி 08,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவ-மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகளும், ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

விழுப்புரம் மாவட்டம் எலவனாசூர் கோட்டை, வணக்கம்பாடி ஆகிய இடங்களில் 2,652 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகளை அமைச்சர் திரு. ப. மோகன் வழங்கினார்.

ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் 187 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சர் தோப்பு திரு. N.D. வெங்கடாசலம் வழங்கினார். இதனை பெற்றுக்கொண்ட மாணவர்கள், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, வாணிப்புத்தூர் பேரூராட்சியில் 3,882 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகளையும் அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி வி. சத்தியபாமா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 171 மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை அமைச்சர் டாக்டர் எஸ். சுந்தரராஜ் வழங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர் திரு. அன்வர்ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வேலூர் மாவட்டம், திருப்பாற்கடல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 60 மாணவ-மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர் திரு. திருத்தணி கோ.அரி உட்பட பலர் பங்கேற்றனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், 2,300 குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள் வழங்கப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் 170 மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

காஞ்சிபுரம் மாவட்டம், கண்ணகப்பட்டு பகுதியில் 642 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள் வழங்கப்பட்டன.