முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி மதுரை மாவட்டம் கவரிமான் கிராமத்தில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை அமைச்சர் திரு.செல்லூர். K.ராஜூ தொடங்கி வைத்தார்

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி மதுரை மாவட்டம் கவரிமான் கிராமத்தில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை அமைச்சர் திரு.செல்லூர். K.ராஜூ தொடங்கி வைத்தார்

செவ்வாய், ஜனவரி 19,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, மதுரை மாவட்டம் கவரிமான் கிராமத்தில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க, மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கவரிமான் கிராமத்தில் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் 5 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சியில், அமைச்சர் திரு. செல்லூர். K.ராஜூ உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளதால், அப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் பயனடைவர். தங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, இல்லத்தரசிகள் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளனர்.