முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், நாமக்கல் மாவட்டத்தில் 1,31,579 பயனாளிகளுக்கு 38 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், நாமக்கல் மாவட்டத்தில்  1,31,579 பயனாளிகளுக்கு 38 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

வியாழன் , ஜனவரி 28,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், நாமக்கல் மாவட்டத்தில் தொழிலாளர் நலவாரியம் மூலம் ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 579 பயனாளிகளுக்கு 38 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. நிதியுதவியை பெற்றுக்கொண்ட பயனாளிகள், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.

தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலத்துறை சார்பில், மாநிலம் முழுவதும் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியம் மற்றும் தமிழ்நாடு உடல் உழைப்பு நலவாரியத்தில் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், ஒவ்வொரு மாவட்டத்திலும் புதிய உறுப்பினர் சேர்ப்பு முகாம் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேவுள்ள அய்யப்பாளையத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில், தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் திரு. வ. தட்சிணாமூர்த்தி, 22 தொழிலாளர்களுக்கு மாந்தோறும் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் பெறுவதற்கான அரசு ஆணைகளை வழங்கினார். மேலும், புதிதாக பதிவு செய்துக் கொண்ட தொழிலாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகளை வழங்கி பேசிய மாவட்ட ஆட்சியர், நாமக்கல் மாவட்டத்தில் 17 வகையான தொழில் பிரிவுகளைச் சேர்ந்த ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 307 பேர், தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர் என்றும், இவர்களில் தேர்வு செய்யப்பட்ட ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 579 தொழிலாளர்களுக்கு 38 கோடியே 52 லட்சத்து 42 ஆயிரத்து 611 ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேபோல், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடைபெற்ற அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாமை அமைச்சர் டாக்டர் C. விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார். இதில் கலந்து கொண்ட 700-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விண்ணப்ப படிவங்களை பூத்தி செய்து வழங்கினர். இந்த முகாமில், 180 தொழிலாளர்களுக்கு 4 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். நலத்திட்ட உதவிகள் பெற்றுக் கொண்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.