முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி திருமூர்த்தி அணை இன்று திறப்பு:94,521 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி திருமூர்த்தி அணை இன்று திறப்பு:94,521 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்

வெள்ளி, ஜனவரி 29,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையில் இருந்து திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம் பிரதான கால்வாய், உடுமலைப்பேட்டை கால்வாய் மற்றும் உயர்மட்டக் கால்வாய் வாயிலாக முதலாம் மண்டல பாசன பகுதிகளுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடம் இருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள பரம்பிக்குளம் பிரதான கால்வாய், உடுமலைப்பேட்டை கால்வாய் மற்றும் உயர்மட்டக் கால்வாய் வாயிலாக இடைவெளிவிட்டு பாசனத்திற்காக 29-1-2016 முதல் (இன்று) தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள 94,521 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளா

ர்.